Wednesday, March 25
Breaking News:
Breaking News:
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? - முதல்வர் ஸ்டாலின்

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மேற்காசிய போர் விளைவாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு அது பொதுமக்களையும், தொழிலாளர்களையும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ள சூழலில், “சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?” என காட்டமாக வினவியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியிருப்பதாவது: ‘கோவிட் காலத்தைப் போல’ என பிரதமர் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பாஜக அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது. பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.


சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான ஒன்றிய பாஜக அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி,” என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

.முன்னதாக நேற்று (மார்ச் 24) மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, மத்திய அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில், இன்று மீண்டும் சிலிண்டர் பிரச்சினையை முன்வைத்து முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.


அனைத்துக் கட்சிக் கூட்டம்: மேற்கு ஆசி​யா​வில் ஏற்​பட்​டுள்ள போர் காரண​மாக, நம் நாட்​டில் சமையல் எரி​வாயு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகங்​கள் சிக்​கலை எதிர்​கொண்டு வரு​கின்​றன.


இதனிடையே, இதுகுறித்து விவா​திக்க அனைத்​துக் ​கட்சி கூட்டத்தை கூட்​டு​மாறு எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் வலி​யுறுத்தி வந்​தனர். காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ், தற்போதைய மேற்கு ஆசிய மோதலை அரசு கையாளும் விதத்தை கடுமை​யாக விமர்​சித்​து இருந்தார்.


இந்​நிலை​யில், இன்று (மார்ச் 25) மாலை அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​துள்​ளது. இதில் மேற்கு ஆசிய போரால் ஏற்பட்டுள்ள பிரச்​சினை​களுக்கு தீர்வு காண்​பது குறித்து விரி​வாக வி​வா​திக்​கப்​படும்​ எனத்​ தெரிகிறது

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *